Saturday, February 24, 2018

திருச்சியில் செப்டம்பர் 9ம்தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி? என்ற ஒரு நாள் கருத்தரங்கு

திருச்சியில் செப்டம்பர் 9ம் தேதி  ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி?  என்ற ஒரு நாள் கருத்தரங்கு திருச்சி இந்திரா காந்தி கல்லூரியில் சேதுராமன் சாத்தப்பன் அவர்களால் நடத்தப்படவுள்ளது.

இந்த கருத்தரங்கு தொழில் முனைவோர், மாணவர்களுக்கு வாய்ப்பு
புதிய தொழில் முனைவோர், கல்லூரி மாணவ, மாணவியர், ஏற்றுமதியாளர்களுக்கு பயன் அளிக்கும்.

புதிய தொழில் தொடங்கவும், ஏற்றுமதி செய்யவும் பலர் விரும்புகின்றனர். எனினும், அவர்களில் பலர் தொழில் தொடங்கவும், ஏற்றுமதி செய்வதில் இருக்கும் நடைமுறைகள் தெரியாததால் தயங்கும் நிலை உள்ளது.

இந்த கருத்தரங்கில், பிரபல வங்கியாளரும், ஏற்றுமதி பயிற்சியாளருமான சேதுராமன் சாத்தப்பன் பயிற்சி அளிக்கிறார். கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை உண்டு. கருத்தரங்கில் பங்கேற்பவர்களுக்கு, மதிய உணவுடன், ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதி மார்க்கெட்டிங் செய்வது எப்படி?, ஏற்றுமதிக்கு ஆங்கில கடிதங்கள் எழுதுவது எப்படி? ஆகிய புத்தகங்கள் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு 0986 961 6533 என்ற எண்ணில் பேசலாம்.

மும்பையை சேர்ந்த இன்ஸ்டிடியூட் பார் லர்னிங் எக்ஸ்போர்ட்ஸ் இந்த கருத்தரங்கை நடத்துகிறது. பிரபல நாளிதழ் தினமலர், திருச்சி இந்திரா காந்தி கல்லூரி ஆகியோர் இணைந்து வழங்குகின்றனர்.

Saturday, September 16, 2017

தொழில் முனைவோருக்கு காத்திருக்கும் “ஸ்டார்ட் அப்” உலகம்

தொழில் முனைவோருக்கு காத்திருக்கும் “ஸ்டார்ட் அப்” உலகம்


சேதுராமன் சாத்தப்பன்


ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு உதவி செய்யும் கம்பெனிகளைப் பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் போதே பல தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பல ஏஞ்சல் முதலீட்டுக் கம்பெனிகள் டெக் ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு தான் உதவி செய்கின்றன என்ற குறையுடன் கூறினார்கள். இது போன்ற நிகழ்வுகள் 2014ம் வருடம் வரை நடந்தது உண்மை தான். தற்போது நல்ல ஐடியாக்களுடன் நீங்கள் உங்கள் நான்-டெக் கம்பெனி ஐடியாவையையும் பிட்ச் செய்தால் பண முதலீடுகள் கிடைக்க நல்ல வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இன்னும் சிலரின் குறை என்னவென்றால் இந்த ஏஞ்சல் பண்டிங் இணையதளங்களுக்குள் சென்றோம், கேட்கும் தகவல்கள் அதிகமாக இருக்கின்றன. இவ்வளவு தகவல்கள் கொடுக்க வேண்டுமா என்று. உங்கள் கம்பெனியில், உங்களின் புதிய ஐடியாவில் முதலீடு செய்ய முடிவு செய்கிறார்கள் என்றால் அவர்கள் கேட்கும் தகவல்களை, டாக்குமெண்டுகளை கொடுக்க வேண்டும். உதாரணமாக வங்கியில் சென்று ஒரு கடன் வாங்கும் போது கூட பல டாக்குமெண்ட்கள் கேட்கிறார்களே, இதை கொடுக்காமல் கடன் வாங்க முடியாமா? இதற்கு உங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும்.

இன்னும் சிலர் கேட்பது நாங்கள் முன்னமே நடத்தி வரும் கம்பெனியின் விரிவாக்கத்திற்கு கடன்கள் கொடுப்பார்களா என்று? உங்களது கம்பெனியின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும் பட்சத்திலும், விரிவாக்கம் புதிய தொழில் நுட்ப அடிப்படையில் இருக்கும் பட்சத்திலும் உங்களுக்கு முதலீடுகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

சென்ற வாரம் நாம் விரிவாக குறிப்பிட்டிருந்த கம்பெனியின் இணையதள முகவரி தமிழில் மட்டும்குறிப்பிடப்பட்டிருந்தது. ஆங்கலத்தில் விடுபட்டிருந்தது. அந்த இணையதள முகவரி www.indianangelnetwork.com.

இந்த வாரம் இன்னுமொரு ஏஞ்சல் பண்டிங் நிறுவனத்தை பார்ப்போம். ஹைதராபாத் ஏஞ்சல் நிறுவனத்தை இந்த வாரம் பார்ப்போம். ஊருக்கு ஒரு ஏஞ்சல் பண்டிங் நிறுவனம் இருப்பது புதிய ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு வசதியாக இருக்கிறது. www.hyderabadangels.com.

2012ல் தொடங்கப்பட்ட இந்த ஏஞ்சல் பண்டிங் நிறுவனம், இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, யு.கே., சிங்கப்பூர், யூ.ஏ.ஈ., போன்ற நாடுகளிலும் புதிய ஸ்டார்ட் அப்-களில் முதலீடு செய்கிறது. இதுவரை சுமார் 25 கம்பெனிகளின் 40 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது. இந்த கம்பெனியில் தற்போது 120 ஏஞ்சல் இன்வஸ்டர்கள் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு மாதம் 300 புதிய கம்பெனிகள் வரை தங்கள் முதலீட்டிற்காக இவர்களிடம் அப்ளை செய்கின்றனர். இந்தக் கம்பெனிகள் விருப்பம் இல்லையென்றால் அதை 3 வாரங்களுக்குள் தெரிவித்து விடுகின்றனர். விருப்பம் இருந்தால் பின்னர் 13 வாரங்கள் வரை எடுத்துக் கொள்கின்றனர். அதிகபட்சமாக 6.5 கோடி வரை முதலீடு வழங்குகின்றனர்.

உங்களுடைய கம்பெனியின் ப்ளானை இவர்களின் இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அடுத்த வாரம் இன்னும் பல புதிய ஐடியாக்களுடன் பார்ப்போம். அதுவரையில் காத்திருங்கள்.

டெக்ஸ்டைல்ஸில் புதிய ஐடியா,
சர்ப்ளஸ் ஸ்டாக்கை என்ன செய்வது?

இது தான் தற்போது பல டெக்ஸ்டைல்ஸ் கம்பெனிகளிடம் இருக்கும் ஒரு பெரிய கவலை. அதாவது தங்களிடம் இருக்கும் புதிய டெக்ஸ்டைல்ஸ் சர்ப்ளஸ் ஸ்டாக்கை என்ன செய்வது என்பது தான்? இதற்கு தீர்வாகத்தான் ஒரு கம்பெனி வந்துள்ளது. அது தான் தான் டெக்ஸ்டைல்ஸ் பாஸ்கட் (www.textilebasket.com). சூட்டிங், சர்ட்டிங், டி-சர்ட், சிபான் போன்றவைகளில் சர்ப்ளஸ் இருக்குமானால் இவர்கள் மூலம் விற்பனை செய்ய முயற்சி செய்யலாம். இவர்கள் வாங்குபவர்களையும், விற்பவர்களையும் இணைக்கிறார்கள். இதில் தான் இவர்களின் வெற்றி அடங்கியிருக்கிறது. வாங்குபவர்களுக்கு விலை சகாயமாக கிடைக்க வழி வகுக்கிறது. அதே சமயம் விற்பவர்களுக்கும் தங்களுடைய குறைந்த ஸ்டாக் சரியான விலையில் விற்கப்பட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைய செய்யும்.


உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள் sethuraman.sathappan@gmail.com,  மொபைல் 09820451259.


Saturday, September 9, 2017

ஏஞ்சல் இன்வஸ்டர்கள் - சேதுராமன் சாத்தப்பன்

ஏஞ்சல் இன்வஸ்டர்கள்

கடந்த சில கட்டுரைகளில் ஏஞ்சல் இன்வஸ்மெண்ட் கம்பெனிகளைப் பற்றிப் பார்த்தோம். அதாவது, இந்தியன் ஏஞ்சல்ஸ், மும்பை ஏஞ்சல்ஸ், சென்னை ஏஞ்சல்ஸ் போன்ற அமைப்புகளைப் பற்றி பார்த்தோம். இந்த பதிவுகளை செய்தவுடன் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள். ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். உங்கள் புதிய ஐடியாவுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நாங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த இணையதளங்களை அல்லது அவர்களின் தொடர்பு முகவரிகளைத் தான். அவர்கள் தாம் உங்களுக்கு, உங்கள் புதிய ஐடியாக்களுக்கு உதவப்போகிறவர்கள்.

இந்த இதழில் இன்னொரு நெட்வொர்க்கைப் பற்றி பார்ப்போம். அதற்கு முன்பு ஏஞ்சல் இன்வஸ்டர்கள் என்பவர்கள் யார் என்றும் பார்த்து விடலாம்.

நிறைய பணம் வைத்திருப்பவர்கள். அதே சமயம் பணத்தை ஒரு கம்பெனியில் மட்டும் போடாமல் புதிய ஐடியாக்களுடன் வரும் தொழிலதிபர்களை ஊக்குவிக்க விரும்புபவர்கள், புதிய துறைகளில் முதலீடு செய்தால் மிகுந்த லாபங்களும் வரலாம், மிகுந்த நஷ்டங்களும் வரலாம் என்று தெரிந்தே ரிஸ்க் எடுக்க விரும்புவர்கள், பொதுவாக உங்களின் புதிய ஐடியாக்களுக்காக ரூபாய் 1,00,000 முதல் ரூபாய் 50,00,000 வரை முதலீடு செய்ய விரும்புபவர்கள். வாருங்கள் இந்த வாரம் இவர்களின் ஒரு நெட்வொர்க்கைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்வஸ்ட்மெண்ட் நெட்வொர்க் என்ற இணையதளம் மூலம் ஏஞ்சல் இன்வஸ்டர்களும், புதிய ஐடியாக்களுடன் வருபவர்களும் இணைகிறார்கள். பண்டிங் தேவைப்படுபவர்கள் இவர்களிடம் முதலில் ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும், உங்கள் கம்பெனியைப் பற்றி பிட்ச் செய்ய வேண்டும், பின்னர் இந்த இணையதளம் உங்களையும், முதலீடு செய்ய விரும்புபவர்களையும் இணைக்கிறது. அதாவது நீங்கள் செய்யும் பிட்ச் சுமார் 6500 முதலீட்டாளர்களை சென்றடைகிறது. உதாரணமாக உங்களின் புதிய ஐடியாவிற்கு சுமார் 5 கோடி ரூபாய் தேவைப்பட்டால், அந்த ஐடியா முதலீட்டாளர்களுக்கு பிடித்து விட்டால்,  சுமார் ரூபாய் 1,00,000 முதல் ரூபாய் 50,00,000 உங்களின் கம்பெனியில் முதலீடு செய்ய தயாராக இருப்பார்கள். இவர்களை இணைப்பது தான் இந்த இணையதளத்தின் வேலை.

தற்சமயம் கேரளாவில் ஒருவர் லக்சுரி வில்லா கட்டுவதற்கு சுமார் 5 கோடி ரூபாய் தேவை, குறைந்தபட்சம் ஒரு முதலீட்டாளர் 25,00,000 ரூபாய் போடலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இது போல டிரைவர் தூங்குவதை தடுக்க உதவும் கருவி கண்டிபிடித்த கம்பெனியான ஸ்டியர் அவெக் ரூபாய் 3 கோடி முதலீடு தேவை எனவும், குறைந்த பட்சம் ஒருவர் ரூபாய் 10,00,000 போடலாம் எனவும் தெரிவித்துள்ளது. இது போன்று பல பிட்ச்-கள் இருக்கின்றன.

இது போல யார் யார் பண்டிங் தர முன்வந்திருக்கிறார்கள். அவர்களின் புரபைல் என்ன என்றும் போட்டிருக்கிறார்கள். மொத்தத்தில் நல்ல ஒரு பண்டிங் இணையதளம். சென்று பாருங்கள்www.investmentnetwork.in


ஏஞ்சல் பண்டிங் – சென்னை ஏஞ்சல்ஸ் - சேதுராமன் சாத்தப்பன்

ஏஞ்சல் பண்டிங் – சென்னை ஏஞ்சல்ஸ்
+++++++++++++

இந்த யூனிகார்ன் காலத்தில் உங்கள் புதிய ஐடியாக்களுக்கு எப்படி பண்டிங்-களை எப்படி திரட்டுவது என்பது பற்றி பார்த்து வந்தோம். வங்கிகள் மூலம் பண்டிங், கிரவுட் பண்டிங், பியர் டூ பியர் பண்டிங், ஏஞ்சல் பண்டிங் ஆகியவை பிரதானமாக இருந்தன.

இந்த வாரமும் ஒரு சிறந்த ஏஞ்சல் பண்டிங் நிறுவனத்தைப் பார்ப்போம். தி சென்னை ஏஞ்சல்ஸ் என்ற இந்த நிறுவனம் பல நிறுவனங்களுக்கு பண்டிங் செய்து அவை இன்று பெரிய கம்பெனிகளாக மாறியிருக்கின்றன.

சாதாரணமாக ஏஞ்சல் பண்டிங் என்பது புதுமையான தொழில்களுக்கு நல்ல ஊக்கம் கிடைக்கும். அந்த வகையில் பார்த்தால் சென்னை ஏஞ்சல்ஸ் பண்டிங் செய்த கம்பெனிகளை பார்க்கலாம். அவைspareshub.com.  இது ஒரு ஆட்டோமொபைல் மார்க்கெட் ப்ளேஸ் ஆகும்.

Ragtagger LifeStyle Pvt Ltd., இந்த கம்பெனி டீன் ஏஜ் பருவத்தினருக்காக உள்ளாடைகளை தயாரிக்கிறது. Brag என்ற ப்ராண்டில் கொண்டு வந்திருக்கிறது. இவர்களின் இணையதள முகவரி www.bragstore.com.

EVegetailing என்ற கம்பெனி நல்ல தரமான காய்கறிகள் மக்களைச் சென்றடைய உதவுகிறது.
மற்றும் EdgeFX Technologies Pvt Ltd.,  Octothrope (Hitwicket),  Hoursglass Design Pvt Ltd., NetTree E-Technologies Pvt Ltd., SP Robotic Works Pvt Ltd (Education),  Betaout (Ecommerce),  Finbud Financial Services Company Pvt Ltd., (Finance),  Agile Parking Solutions Pvt Ltd.,  Novicle Technologies Pvt Ltd., (Ecommerce), Ketto Online Services Company Pvt Ltd., (Crowd Funding)  போன்ற 40க்கும் மேற்பட்ட கம்பெனிகளை துவக்க ஏஞ்சல் பண்டிங் செய்து உதவியிருக்கிறது.

இந்த கம்பெனிகள் எல்லாம் இன்று சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.



எப்படி செயல்படுகிறது?

ப்ரீஸ்கிரீனிங் / ஸ்கிரீனிங் – இதற்கு  8 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.

மேலே கண்ட் ஸ்கிரினிங் வெற்றிகரமாக இருந்தால் – அதன் பிறகு டீப் டிரைவ் – இதற்கு 4 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.

டீப் டிரைவுக்கு பிறகு – நீங்கள் ப்ரசண்டேஷன் செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் நேரடியாக செல்ல வேண்டும் – இதற்கு 12 நாட்கள் எடுத்து கொள்ளப்படுகிறது.

ப்ரசண்டேஷன் சக்ஸஸ்புல்லாக இருந்தால் பின்னர் டேர்ம் ஷீட் – இதற்கு 10 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

டேர்ம் ஷீட்-க்கு பிறகு உங்களைப் பற்றி, உங்கள் கம்பெனியைப் பற்றிய முழு விபரங்களை திரட்டுகிறது. பின்னர் ஒத்துக் கொள்ளப்பட்ட பண்டிங்கை தர முன் வருகிறது – இதற்கு 90 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.

இது தான் ஒரு ஏஞ்சல் பண்டிங் கம்பெனியின் பண்டிங் முறையாகும். இதன் மூலம் என்ன தெரிகிறது? உங்கள் கம்பெனி அவர்களுக்கு பிடித்திருந்தால் அவர்கள் பண்டிங் கொடுக்க சுமார் 120 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஆகும்.


இந்த கம்பெனியில் 84 தனிப்பட்ட ஏஞ்சல் இன்வஸ்டர்கள் இருக்கிறார்கள். இது தவிர 9 இன்ஸ்டிடியூசனல் இன்வஸ்டர்களும் இருக்கிறார்கள். இவர்கள் மொத்தமாக போடும் பணத்தை வைத்துத் தான் புதிய தலைமுறைகளின் புதிய எண்ணங்களுக்கு வடிவு கொடுக்கப்படுகிறது.

இவர்களின் இணையதள முகவரி www.thechennaiangels.com சென்று பாருங்கள் நாளை உங்களையும் இந்த இணையதளம் தொழிலதிபராக ஆக்கலாம்.

ஏஞ்சல் பண்டிங் – மும்பை ஏஞ்சல்ஸ் - சேதுராமன் சாத்தப்பன்

++++++++++++
ஏஞ்சல் பண்டிங் – மும்பை ஏஞ்சல்ஸ்
+++++++++++++

ஒரு சிறு தீப்பொறியில் கிளம்பிய காட்டுத் தீ. மும்பை ஏஞ்ச்ல்ஸை இப்படியும் அழைக்கலாம். 2006ம் வருடம் துவங்கியது இந்த பயணம். புதிய ஐடியாக்களையும், புதிய நிறுவனங்களையும் ஊக்குவித்து அவற்றை பெரிய கம்பெனிகளாக்குவது தான் குறிக்கோள் என்ற எண்ணத்துடன் துவங்கி அதை இன்று வரை நிறைவேற்றி வருகிறது.

“இன்மோபி” என்ற கம்பெனி தான் இவர்களின் முதல் இன்வஸ்ட்மெண்ட்.

நல்ல ப்ளான், நல்ல டீம் என்று ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் இவர்கள் இணையதளத்தில் சென்று தங்கள் ப்ளான்களை பதிவேற்றலாம்.

அதன் பிறகு ஸ்கீரீனிங் இருக்கும். அதில் வெற்றி பெற்று விட்டால் அந்த டீம் தங்களுடைய ப்ளானை ப்ரசண்ட் பண்ண அழைக்கப்படுவார்கள். பின்னர் 20 நிமிடம் ப்ளானை ப்ரசண்ட் செய்ய, 15 நிமிடம் கேள்வி பதிலுக்காக என்ற கடினமான வரை முறைகள் இருக்கும்.

இவ்வளவும் பிடித்திருந்தால் உங்கள் டீம் சாம்பியனுடன் அவர்கள் டீம் பேச்சு வார்த்தை நடத்தும். பின்னர் பண்டிங் பற்றி பேசப்படும்.

இவர்கள் பண்டிங் செய்த கம்பெனிகள் அக்ரிகல்சர், ஈ காமர்ஸ், எஜுகேஷன், பைனான்ஸ், கேமிங், ஹெல்த் கேர், ஐ.டி., மீடியா மற்றும் எண்டர்டெய்ன்மெண்ட், டெக்னாலஜி, டெலிகாம், சர்வீஸ் ஆகிய துறைகள் அடங்கும். கிட்டதட்ட 83 கம்பெனிகளி இதுவரை முதலீடு செய்துள்ளார்கள்.

மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவது தான் இவர்களின் நோக்கம்.

இவர்களின் இணையதள முகவரி www.mumbaiangels.comசென்று பாருங்கள் நாளை உங்களையும் இந்த இணையதளம் தொழிலதிபராக ஆக்கலாம்.

ஏஞ்சல் பண்டிங் - சேதுராமன் சாத்தப்பன்

ஏஞ்சல் பண்டிங்
+++++++++++++
சேதுராமன் சாத்தப்பன்
++++++++++++

இதுவரை கிரவுட் பண்டிங் பற்றியும், பியர் டு பியர் லெண்டிங் பற்றியும் பார்த்தோம். இந்த வாரம் ஏஞ்சல் பண்டிங் பற்றி பார்ப்போம்.

ஏஞ்சல் பண்டிங் என்றால் என்ன?

ஏஞ்சல் பண்டிங் என்றால் உபரி பணத்தோடு உள்ளவர்கள் ஸ்டார்ட் அப்-களில் முதலீடு செய்ய விருப்பமுள்ளவர்கள் பணங்களை போட்டு அவற்றைஏரை  ஸ்டார்ட் அப்-களில் முதலீடு செய்கின்றனர். அவர்கள்மூலதனத்துடன் வழிகாட்டுதல் அல்லது ஆலோசனைகளையும் வழங்குவார்கள். பியர் டூ பியர் லெண்டிங்கிற்கும், ஏஞ்சல் பண்டிங்கிற்கும் என்ன வித்தியாசம்? பியர் டு பியர் லெண்டிங் என்றால் குறைந்த அளவு கடன் கொடுக்கும் நிறுவனம் ஆகும். அதாவது 500,000 ரூபாய் அதிகபட்சம் கடன் கொடுப்பார்கள். ஆனால் ஏஞ்சல் பண்டிங்கில் கோடிக்கணக்கிலும் பணம் கடன் கொடுப்பார்கள். நிறுவனத்தில் பங்கு கேட்பார்கள்.
ஏஞ்சல் பண்டிங்கில் இரண்டு வகையான முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். ஒன்று குறைந்தபட்சம் 25,00,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இது போன்று முதலீடு செய்பவர்க்ளின் பணங்களை சேர்த்து அவற்றை வைத்து ஏஞ்சல் பண்டிங் மூலம் புதிய ஸ்டார்ட் அப்-களுக்கு உதவி செய்கிறார்கள்.

ஏஞ்சல் முதலீட்டாளர்கள் கூகுள்யாகூ மற்றும் அலிபாபா உள்ளிட்ட பலமுக்கிய நிறுவனங்களைத் தொடங்க உதவியுள்ளனர்இந்த மாதிரிமுதலீடு பொதுவாக ஒரு நிறுவனத்தின் தொடக்க நிலைகளில்ஏற்படுகிறது. இவ்வாறு முதலீடு செய்பவர்கள் அந்த ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் சுமார் 30 சதவிகித அளவு பங்குகளைஎதிர்பார்க்கிறார்கள்.  அதிக வருமானம் பெறும் முதலீட்டில் அதிகஆபத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்புகின்றனர்.

இங்கே இந்தியாவில் பிரபலமான ஏஞ்சல் முதலீட்டாளர்களின் கம்பெனிகளில் இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க் என்ற் கம்பெனி நல்ல செயல்பாட்டில் இருக்கிறது. அவர்களுடைய இணையதளம்www.indianangelnetwork.com

இந்த நெட்வொர்க்கில் இதுவரை சுமார் 461 தனிப்பட்ட முதலீட்டாளர்களும், 7 நிறுவனங்களும் மெம்பர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு 7 நகரங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. மாதம் 500 க்கும் அதிகமான ஸ்டார் அப்-களை நோக்குகின்றனர்.

உங்களிடம் நல்ல ஐடியாக்கள் இருக்குமானால் இவர்களை நாடுங்கள்.

பியர் டு பியர் லெண்டிங் - சேதுராமன் சாத்தப்பன்

பியர் டு பியர் லெண்டிங் - சேதுராமன் சாத்தப்பன்


கடந்த சில வாரங்களாக கிரவுட் பண்டிங் பற்றி பார்த்தோம். அதற்கு உங்களுக்கு உதவும் இணையதளங்கள் பற்றியும் பார்த்தோம். இந்த பண்டிங் சம்பந்தப்பட்ட இன்னொரு முறையையும் பார்ப்போம். அது பி டு பி லெண்டிங். இது பியர் டு பியர் லெண்டிங் (peer to peer lending) எனப்படும்.

கிரவுட் பண்டிங்கில் ஒரு ப்ராஜக்டிற்கு பலர் பண உதவி செய்து வந்தார்கள். பியர் டு பியர் லெண்டிங்கில் உங்களிடம் உபரியாக ஒரு லட்சம் பணம் இருக்கிறது என்றால் அதை வங்கியில் போடாமல் இது போன்ற கம்பெனிகளிடம் கொடுத்தால் அவர்கள் யாருக்கு, எந்த கம்பெனிக்கு பணம் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு கடனாக கொடுத்து விட்டு பின்னர் அவர்களிடம் இருந்து வரும் வட்டியில் பணம் போட்டவர்களுக்கு டிவிடெண்ட் அல்லது வட்டி கொடுப்பார்கள்.

இது பெரும்பாலும் bidding முறையில் நடக்கிறது. அதாவது பணம் வாங்குபவர் தங்களுக்கு என்ன தேவை என்பதை விளக்கமாக கூறி, என்ன வட்டியில் தேவை, எவ்வளவு காலத்திற்கு தேவை என்பதை கூறி பிட் செய்தால் அதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் உதவுவார்கள்.

இதனால் பணம் போடுபவர்களுக்கு என்ன லாபம்? அவருடைய பணம் பல புராஜக்ட்களில் முதலீடு செய்யப்படுகிறது, ஒரு புராஜக்டில் மட்டுமல்ல.

இதனால் பணம் வாங்குபவருக்கு என்ன லாபம்? வங்கிகள் மூலமாக கடன் கள் கிடைக்காத போது இது போன்ற நிறுவனங்கள் கொடுக்கும் கடன்கள் ஆபத்பாந்தவானாக இருக்கிறது. தங்களுடைய கனவுகளை நனவாக்க உதவுகிறது.

இந்த லோன் பின்னர் மாதா மாதம் தவணயாக செலுத்தப்படுகிறது. அது அவர் யாரிடமிருந்து வாங்கினாரோ அவருக்கு நேரடியாக செலுத்துகிறார்.

இணையதளங்களின் பங்கு என்ன? இதற்கென இயங்கு இணையதளங்கள் பணம் கொடுப்பவர்களையும், வாங்குபவர்களையும் இணைக்கும் பாலமாக திகழ்கிறது. இந்த இரு வகையினரிடம் இருந்து கேஒய்சி டாக்குமெண்ட்களை முழுமையாக பெற்று அவர்களைப் பற்றிய முழு விபரங்களை சேகரித்து வைத்து கொள்கிறது.

இதற்கென உதவும் சில இணையதளங்களை கீழே காணலாம்.


அடுத்த கட்டுரையில் இன்னும் சில இணையதளங்களையும் பார்க்கலாம்.

திருச்சியில் செப்டம்பர் 9ம்தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி? என்ற ஒரு நாள் கருத்தரங்கு

திருச்சியில் செப்டம்பர் 9ம் தேதி  ஞாயிறன்று  ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?,  ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வத...