Saturday, September 9, 2017

“யூனிகார்ன்” காலத்தில் நிதி திரட்ட என்னென்ன வழிகள் இருக்கின்றது? – பாகம் 1 - சேதுராமன் சாத்தப்பன்

 யூனிகார்ன்” காலத்தில் நிதி திரட்ட என்னென்ன வழிகள் இருக்கின்றது? 

பாகம் 1

சேதுராமன் சாத்தப்பன்


நம் எல்லோருக்கும் பல பிசினஸ் ஸ்டார்ட் அப் ஐடியாக்கள் இருக்கலாம். அதை தொடங்கி சிறப்பாக நடத்துவது எப்படி சிறப்பாக என்றும் தெரிந்திருக்கலாம். ஆனால் எப்படி தொடங்குவது,தேவையான முதலீடு எங்கிருந்து கிடைக்கும். வங்கிகளில் நமது புதிய பிசினஸ் ஐடியாவிற்கு நம்பி கடன் கள் தருவார்களா?அவர்களுக்கு ஜாமீனாக கொடுக்க சொத்துக்கள் இல்லையேஎன்ற கவலையோடு தான் பலர் இன்று இருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறதுநிதி தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். அந்த நிதியை வங்கியைத் தவிர்த்து பிறர் மற்றும் பிறர் நிறுவனங்களிலிருந்து இந்தயுனிகார்ன்” காலத்தில் எப்படி திரட்டுவது என்று பார்க்கலாம்.

முதலில் யூனிகார்ன்” என்றால் என்ன என்று பார்க்க வேண்டும்.யூனிகார்ன் என்பது கற்பனையான ஒரு உருவம். ஒரு நீண்ட கொம்புடைய ஒரு குதிரை

ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் 1 பில்லியன் டாலர் வேல்யுவேஷன் அடைந்தால் அது யூனிகார்ன் என்று அழைக்கப்படும். மார்ச் 2017 தகவல் படி உலகத்தில் 223 யூனிகார்ன்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு சில நிறுவனங்களை கூற வேண்டுமென்றால் உபர்,ஏ.என்.டி. பைனான்சியல் போன்றவற்றை கூறலாம்.

ஸ்டார்ட் அப் என்றால் என்ன?

முதலில் மூளை ஒன்றையையே மூலதனமாக வைத்து தொடங்கப்படுவது தான் ஸ்டார்ட் அப். ஸ்டார்ட் அப் என்பது பெரிய கனவுகளுடன் தொடங்கப்படும் ஒரு நிறுவனம். முதலில் சிறிதாக   இருந்தாலும் பின்னர் சில வருடங்கள் ஒரு பெரிய அளவு வளரும் நிறுவனமாக உயரும் வாய்ப்புக்கள் இருக்கும். ஆனால் 100 ஸ்டார்ட் அப்கள் ஆரம்பிக்கப்பட்டால் 80 முதல் 90 கம்பெனிகள் வரை அந்த நிலை வரை வராது. பலவிதமான பிரச்சனைகளால் அந்த நிலையை எட்ட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகி விடும். சமீபத்திய ஒரு ஆய்வு படி 94 சதவீத கம்பெனிகள் முதல் வருடத்திலேயே மேலே வர முடியவில்லை. காரணம் தேவையான நிதி (பண்டிங்) இல்லாதது தான்.


தமிழர்களும்பண்டிங்கும்

காலத்தை பின் நோக்கிப் பார்த்தால் வியாபாரங்களுக்கு நிதி உதவி (பண்டிங்) செய்தவர்களில் முன்னோடிகள் என்றால்  தமிழர்களும்இருக்கிறார்கள் என்பேன். எப்படி என்று கேட்கிறீர்களாபர்மா வளமையான நாடு....அந்த நாட்டின் நடுவே ஒடும் பிரமாண்டமானஇரவாடி நதி அந்த நாட்டையே வளமாக வைக்கும் அளவு வளமானது. ஆனால்அங்கிருப்பவர்களிடம் விவசாயம் செய்யதொழில் செய்ய பணமில்லை. அவர்களுக்கு கடன்கள் கொடுக்க அரசாங்க நிறுவனங்களும் முன் வரவில்லை. அவர்கள் இருக்கும் மிகச்சிறிய கிராமங்களில் வங்கி மற்றும் அரசு நிறுவனங்கள் என்பவை வருவது என்ற பேச்சுக்கே இடமில்லை. பல கிராமங்கள் பஸ் / கார்களே பார்த்திராத ஊர்கள். வங்கிகளெல்லாம் பெரிய ஊர்களில் தாம் இருந்தன். கிராமங்களில்குக்கிராமங்களில் வாழ்பவர்கள் எல்லாம் தினசரி வாழ்வாதாரத்திற்கே தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது தான் தமிழகத்தைச் சேர்ந்த அந்த நாட்டு மொழியே தெரியாத நகரத்தார்கள் அந்த கிராமங்களுக்கேஅவர்களுடனே வாழ்ந்து, அவர்களுக்கு பணத்தை கடனாகவும்கொடுத்தார்கள். அது நகைகளின் மீதாகவும் இருந்த்துநகைகள் இல்லாத கடனாகவும்  இருந்தது. இது தான் அந்த நாட்டின் வளர்ச்சிக்கும்நகரத்தார்களின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தது.
இதிலிருந்து என்ன தெரிகிறதுதமிழர்கள் நிதி ஆதாரங்களுக்கு உதவுவதில் 150 ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து விளங்கியிருக்கிறார்கள்.
.
ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கும் ஒவ்வொருவருக்கும் மனதில் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கும். அது எப்படி நமது கம்பெனிக்கு பண்டிங் கொண்டு வருவது என்பது தான்.
ஸ்டார்ட் அப் பண்டிங்களில் வங்கிகளைத் தவிர என்னென்ன முறைகள்வழிகள் இருக்கிறதுஅவை என்னென்ன என்று விரிவாக பார்ப்போம்.

No comments:

Post a Comment

திருச்சியில் செப்டம்பர் 9ம்தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி? என்ற ஒரு நாள் கருத்தரங்கு

திருச்சியில் செப்டம்பர் 9ம் தேதி  ஞாயிறன்று  ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?,  ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வத...