Saturday, September 9, 2017

நிதி திரட்ட என்னென்ன வழிகள் இருக்கிறது? பாகம் 2 - சேதுராமன் சாத்தப்பன்


 நிதி திரட்ட என்னென்ன வழிகள் இருக்கிறது? 
பாகம் 2

சேதுராமன் சாத்தப்பன்

நிதி ஆதாரம் என்றால் என்ன, அதன் தேவை என்ன என்பதைப் பற்றி முன்பு பார்த்தோம். இந்த கட்டுரையில் எந்தெந்த முறைகளில் உங்கள் ஸ்டார்ட் அப்-பிற்கு பண்டிங் கிடைக்கலாம் என்று பார்ப்போம்.

செல்ப் பண்டிங்

பல சமயங்களில் ஸ்டார்ட் அப் ஆரம்பித்தவர்களில் பலர் சொல்லகேட்டிருக்கலாம்என்னுடைய கம்பெனிக்கு தேவையான அடிப்படைமூலதனத்தை நான் தான் முதலீடு செய்தேன். முதன் முதலில்பெரும்பாலும் நீங்கள் தாம் செய்ய வேண்டியிருக்கும்நீங்கள் என்றால்உங்கள் பெற்றோரும் அதில் அடங்கியிருக்கின்றனர்.


கிரவுட் பண்டிங்


தற்போது அதிகம் பிரபலமாகி வரும் வழி இது. ஒன்றுக்கும் மேற்பட்டநபர்கள் அந்த கம்பெனியில் முதலீடு செய்வதுஅது கடனாகவும்இருக்கலாம்மூலதனமாக இருக்கலாம்... நீங்கள் உங்கள் கம்பெனியைப் பற்றிய டீடெய்ல்ட் பிளான் தயாரித்து 
 கிரவுட் பண்டிங்ப்ளாட் பார்மில் போட வேண்டும். கிரவுட் பண்டிங் ப்ளாட்பாரங்கள் பல இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருக்கிறது. யாருக்கு உங்கள்பிசினசில் இண்டிரஸ்ட் இருக்கிறதோ அவர்கள் உங்களுக்கு பண்டிங்தருவார்கள்.
சில பிரபலமான கிரவுட் பண்டிங் இணையதளங்கள் IndiegogoWishberry,Ketto and Catapooolt. அமெரிக்காவில் சில பிரபலமான கிரவுட் பண்டிங்ப்ளாட்பார்ம்கள் இவை Kickstarter, RocketHub, DreamfundedOnevest and GoFundMe


ஏஞ்சல் இன்வஸ்மெண்ட

நிறைய பணம் வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள்.இவர்கள் தனிப்பட்ட நபராக இருக்கலாம் அல்லது குழுவாக இருக்கலாம். கூகுள்யாகூஅலிபாபா போன்ற கம்பெனிகளில் இப்படி தான் முதலில்முதலீடுகள் செய்யப்பட்டன. வெஞ்சர் கேபிடலிஸ்டை விட குறைவானபணம் முதலீடு செய்வார்கள். இந்தியாவில் பெரும்பாலும் பல ஊர்களில்ஏஞ்சல் நெட்வொர்க் இருக்கிறதுIndian Angel NetworkMumbai AngelsHyderabad Angels போன்று பல ஊர்களிலும் ஏஞ்சல் நெட்வொர்க் இருக்கிறது.

வெஞ்சர் கேபிடல்

வெஞ்சர் கேபிடல் என்பது ப்ரபஷனலி மேனேஜ்ட் பண்டுகள்நல்லபொட்டன்ஷியல் உள்ள கம்பெனிகளில் முதலீடு செய்வார்கள்.சாதாரணமாக உங்கள் கம்பெனியின் ஈக்குவிட்டியில் பங்கு கேட்பார்கள்.பின்னர் நீங்கள் புதிய வெளியீடு அதாவது .பி.கொண்டு வரும் போதுஅதிலிருந்து வெளியேறி விடுவார்கள். உங்களுக்கு மெண்டர்ஷிப்,அட்வசைஸ் போன்றவைகளை தருவார்கள்அது உங்கள் நிறுவனத்தைநல்ல வழியில் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும். Nexus Venture PartnersHelion VenturesKalaari CapitalAccel PartnersBlume VenturesCanaanSequoia Capital and Bessemer Ventures.


இன்குபேட்டர்அக்சலிரேட்டர்

இவர்கள் உங்கள் ஸ்டார்ட் அப் குழந்தையை முதலில் வழி நடத்திசெல்ல உதவுவார்கள் இன்குபேட்டர்கள் உங்கள் கம்பெனிக்குடிரெயினிங்நெட்வொர்க்அப்போதைய செலவுகள் ஆகியவற்றுக்குஉதவுவார்கள். அக்சலிரேட்டர்கள் உங்கள் ஸ்டார்ட் அப்-பை பெரிய லெவலுக்கு கொண்டு செல்ல உதவுபவர்கள். Amity Innovation IncubatorAngelPrimeCIIEIAN Business IncubatorVillgroStartup Village and TLabs.

சென்னையிலும், வேலூரிலும் இது போல இன்குபேட்டர்கள் பல புதிய ஸ்டார்ட் அப்-களுக்கு உதவி செய்து வருகிறார்கள். வேலூரில் வி.ஐ.டி. இஞ்சினியரிங் கல்லூரி பல ஸ்டார்ட் அப்-களுக்கு இன் குபேட்டராக இருந்து வெற்றிகரமாக பல ஸ்டார்ட் அப்-களை கொண்டுவர உதவியிருக்கிறது.

போட்டிகளில் கலந்து கொள்வது

உலகளவில்இந்திய அளவில் ஸ்டார்ட் அப்களுக்கு பல போட்டிகள்நடத்தப்படுகின்றனஇதன் மூலம் வெளிச்சத்திற்கு வரும்கம்பெனிகளுக்கு வெளியுலகத்தில் நல்ல மதிப்பு இருக்கும்.நடக்கவிருக்கும் எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்ளுங்கள். போட்டிகளுக்கு உதராணம்.NASSCOM’s 10000 startupsMicrosoft BizSparksConquestNextBigIdea Contest, and Lets Ignitehttps://www.f6s.com/programs

No comments:

Post a Comment

திருச்சியில் செப்டம்பர் 9ம்தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி? என்ற ஒரு நாள் கருத்தரங்கு

திருச்சியில் செப்டம்பர் 9ம் தேதி  ஞாயிறன்று  ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?,  ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வத...