Saturday, September 9, 2017

ஏஞ்சல் இன்வஸ்டர்கள் - சேதுராமன் சாத்தப்பன்

ஏஞ்சல் இன்வஸ்டர்கள்

கடந்த சில கட்டுரைகளில் ஏஞ்சல் இன்வஸ்மெண்ட் கம்பெனிகளைப் பற்றிப் பார்த்தோம். அதாவது, இந்தியன் ஏஞ்சல்ஸ், மும்பை ஏஞ்சல்ஸ், சென்னை ஏஞ்சல்ஸ் போன்ற அமைப்புகளைப் பற்றி பார்த்தோம். இந்த பதிவுகளை செய்தவுடன் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள். ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். உங்கள் புதிய ஐடியாவுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நாங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த இணையதளங்களை அல்லது அவர்களின் தொடர்பு முகவரிகளைத் தான். அவர்கள் தாம் உங்களுக்கு, உங்கள் புதிய ஐடியாக்களுக்கு உதவப்போகிறவர்கள்.

இந்த இதழில் இன்னொரு நெட்வொர்க்கைப் பற்றி பார்ப்போம். அதற்கு முன்பு ஏஞ்சல் இன்வஸ்டர்கள் என்பவர்கள் யார் என்றும் பார்த்து விடலாம்.

நிறைய பணம் வைத்திருப்பவர்கள். அதே சமயம் பணத்தை ஒரு கம்பெனியில் மட்டும் போடாமல் புதிய ஐடியாக்களுடன் வரும் தொழிலதிபர்களை ஊக்குவிக்க விரும்புபவர்கள், புதிய துறைகளில் முதலீடு செய்தால் மிகுந்த லாபங்களும் வரலாம், மிகுந்த நஷ்டங்களும் வரலாம் என்று தெரிந்தே ரிஸ்க் எடுக்க விரும்புவர்கள், பொதுவாக உங்களின் புதிய ஐடியாக்களுக்காக ரூபாய் 1,00,000 முதல் ரூபாய் 50,00,000 வரை முதலீடு செய்ய விரும்புபவர்கள். வாருங்கள் இந்த வாரம் இவர்களின் ஒரு நெட்வொர்க்கைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்வஸ்ட்மெண்ட் நெட்வொர்க் என்ற இணையதளம் மூலம் ஏஞ்சல் இன்வஸ்டர்களும், புதிய ஐடியாக்களுடன் வருபவர்களும் இணைகிறார்கள். பண்டிங் தேவைப்படுபவர்கள் இவர்களிடம் முதலில் ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும், உங்கள் கம்பெனியைப் பற்றி பிட்ச் செய்ய வேண்டும், பின்னர் இந்த இணையதளம் உங்களையும், முதலீடு செய்ய விரும்புபவர்களையும் இணைக்கிறது. அதாவது நீங்கள் செய்யும் பிட்ச் சுமார் 6500 முதலீட்டாளர்களை சென்றடைகிறது. உதாரணமாக உங்களின் புதிய ஐடியாவிற்கு சுமார் 5 கோடி ரூபாய் தேவைப்பட்டால், அந்த ஐடியா முதலீட்டாளர்களுக்கு பிடித்து விட்டால்,  சுமார் ரூபாய் 1,00,000 முதல் ரூபாய் 50,00,000 உங்களின் கம்பெனியில் முதலீடு செய்ய தயாராக இருப்பார்கள். இவர்களை இணைப்பது தான் இந்த இணையதளத்தின் வேலை.

தற்சமயம் கேரளாவில் ஒருவர் லக்சுரி வில்லா கட்டுவதற்கு சுமார் 5 கோடி ரூபாய் தேவை, குறைந்தபட்சம் ஒரு முதலீட்டாளர் 25,00,000 ரூபாய் போடலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இது போல டிரைவர் தூங்குவதை தடுக்க உதவும் கருவி கண்டிபிடித்த கம்பெனியான ஸ்டியர் அவெக் ரூபாய் 3 கோடி முதலீடு தேவை எனவும், குறைந்த பட்சம் ஒருவர் ரூபாய் 10,00,000 போடலாம் எனவும் தெரிவித்துள்ளது. இது போன்று பல பிட்ச்-கள் இருக்கின்றன.

இது போல யார் யார் பண்டிங் தர முன்வந்திருக்கிறார்கள். அவர்களின் புரபைல் என்ன என்றும் போட்டிருக்கிறார்கள். மொத்தத்தில் நல்ல ஒரு பண்டிங் இணையதளம். சென்று பாருங்கள்www.investmentnetwork.in


2 comments:

  1. sir i am venugopal from pollachi . pitiching is free of cost or having any fees.

    ReplyDelete
  2. Sir, I am planning to start one B2B website portal, already website development is in progress. due to fund issue. now work is stopped. i need some more fund, please tell me, how i can get fund for website development.

    ReplyDelete

திருச்சியில் செப்டம்பர் 9ம்தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி? என்ற ஒரு நாள் கருத்தரங்கு

திருச்சியில் செப்டம்பர் 9ம் தேதி  ஞாயிறன்று  ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?,  ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வத...