Saturday, September 9, 2017

கிரவுட் பண்டிங் திரட்டும் முன்பு உங்களிடம் சில கேள்விகள்

கிரவுட் பண்டிங் திரட்டும் முன்பு
உங்களிடம் சில கேள்விகள்

நீங்கள் கிரவுட் பண்டிங் திரட்டும் முன்பு உங்களிடம் பெரும்பாலும் கேட்கப்படும் கேள்விகள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
  • உங்கள் ஸ்டார்ட் அப்-பிற்கு எவ்வளவு பணம் தேவை?
  • நீங்கள் பண உதவியை எதிர்பார்ப்பதற்கு மிகவும் முக்கியமான காரணங்கள் என்னென்ன?
  • உங்களுடைய பர்சனல் கிரிடிட் ஸ்கோர் என்ன? (750க்கு மேல் இருக்க வேண்டும்)
  • உங்களுடைய தொழில் புதியதா? இல்லை முன்னமே உள்ளதா? முன்னமே இருந்தால் எவ்வளவு வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்?
  • முன்னமே நடத்திக் கொண்டிருந்தால் அதன் கடந்த கால வருட வருமானம் என்ன?
  • நீங்கள் அரசாங்க நிறுவனங்களுக்கும் விற்கிறீர்களா? இல்லை தனிப்பட்ட நபர்களுக்கு / நிறுவனங்களுக்கு மட்டும் தானா?
  • இந்த நிறுவனத்தில் உங்களுடைய பங்களிப்பு என்னவாக இருக்கும்?
  • நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் தொழில் லாபகரமானதா? இல்லை நீங்கள் செய்ய நினைத்திருக்கும் தொழில் லாபகரமானதா?
  • உங்களுக்கு எவ்வளவு நாட்களில் / மாதங்களில் இந்த கிரவுட் பண்டிங் தேவைப்படும்?

கடந்த சில வாரங்களாக கிரவுட் பண்டிங் தளங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். இவை உங்களுக்கு உபயோகமாக இருக்கலாம். அவற்றை பார்க்கலாம்.



கிரவுட் பண்டிங் தளங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.தற்போது உலகளவில் நிதி திரட்டும் தளம் ஆகும்மிகவும் பிரபலமானவகைகளான தொழில்நுட்பம்வடிவமைப்புதிரைப்படம்பயணம்மற்றும் சுற்றுச்சூழல் நட்பு ஆகியவற்றுக்கு கிரவுட் பண்டிங் திரட்ட உதவி செய்கிறது.  பல வணிகத் தொழில்களுக்கு கூடுதலாகபெண்களுக்கு  இண்டிகோகோ ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது. 47 சதவீதம் பெண்கள் இந்த கிரவுட் பண்டிங் தேவைகளில் பங்கு பெறுகிறார்கள்.

இந்த இணையதளத்தை வருடத்திற்கு சுமார் 18 கோடி மக்கள் பார்வையிடுகின்றனர். 223 நாடுகளிலிருந்து தேவைகளுக்கான வின்ணப்பங்கள் வருகின்றன. இவர்கள் மூலம் பண்டு செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்கும் தளமாகவும் இது இருக்கிறது. நல்ல ஒரு இணையதளம் வடிவமைத்துள்ளார்கள். சென்று பாருங்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். தொழில் மட்டுமல்ல மற்றும் பல வகைகளுக்கு உதவுகிறார்கள். உங்கள் எண்ணங்களை வடிவமாக்கும் இணையதளம்.

No comments:

Post a Comment

திருச்சியில் செப்டம்பர் 9ம்தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி? என்ற ஒரு நாள் கருத்தரங்கு

திருச்சியில் செப்டம்பர் 9ம் தேதி  ஞாயிறன்று  ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?,  ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வத...