Saturday, September 9, 2017

ஸ்டார்ட் அப் கம்பெனிகள் திரட்டிய பண்டிங் விபரங்கள்

ஸ்டார்ட் அப் கம்பெனிகள் திரட்டிய பண்டிங் விபரங்கள்


கடந்த இரண்டு வருடங்களில் முதல் ஆறு மாதங்களில் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இந்தியாவில் எவ்வளவு பணம் திரட்டியுள்ளது என்று பார்த்தால் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள்.

2016ம் வருடம் முதல் ஆறு மாதங்கள் – 552 கம்பெனிகள், 2017ம் வருடம் முதல் ஆறு மாதங்கள் 455 கம்பெனிகள்
2016ம் வருடம் முதல் ஆறு மாதங்கள் – திரட்டிய பணம் 2.30 பில்லியன் டாலர்கள் (அதாவது சுமாராக 16000 கோடி ரூபாய்கள்). 2017ம் வருடம் முதல் ஆறு மாதங்கள் – திரட்டிய பணம் 7.02 பில்லியன் டாலர்கள் (அதாவது சுமாராக 45500 கோடி ரூபாய்கள்).
2016ம் வருடம் முதல் ஆறு மாதங்கள் – ஆவரேஜ் டீல் சைஸ் 4 மில்லியன் டாலர்கள் (அதாவது 26 கோடி ரூபாய்கள்), 2017ம் வருடம் முதல் ஆறு மாதங்கள் – ஆவரேஜ் டீல் சைஸ் 15 மில்லியன் டாலர்கள் (அதாவது 97.50 கோடி ரூபாயகள்).
இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்திய ஸ்டார்ட் அப்-களில் முதலீடு செய்ய பலர் விரும்புகின்றனர் என்று.

இந்த வாரம் இன்னொரு இணையதளத்தைப் பார்ப்போம்...


பல கம்பெனிகளின் முக்கிய ப்ராளமே பண்டிங் தான். அந்த ப்ராபளத்தை எங்களிடம் விட்டு விடுங்கள், நீங்கள் நல்ல கனவுகளுடன் வாருங்கள் என்று அழைக்கிறார்கள். உங்கள் வெற்றிக்கான பண்டிங்கை நாங்கள் உங்களுக்கு உருவாக்குகிறோம் என்று கூறுகிறார்கள்.

இவர்களின் இணையதளத்தில் சென்று பதிவு செய்து கொண்டால், அதாவது நீங்கள் என்ன பிசினஸ் செய்ய விரும்புகிறீர்கள், உங்களின் கனவுகள் என்ன?, அது புதுமையான பிசினஸா?, எவ்வளவு பணம் தேவைப்படும், அந்த பிசினஸ் மற்ற பிசினஸ்களில் இருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறது? என்றெல்லாம் நீங்கள் விரிவாக அவர்களுக்கு கூறினால் அவர்களுக்கு உங்களுடைய பிசினஸ் பிடித்திருந்தால் 72 மணி நேரத்தில் தொடர்பு கொண்டு நீங்கள் விளக்கியிருக்கும் பிசினஸுக்கு முதலீடுகள் கிடைக்குமா? அப்படி கிடைக்க வேண்டுமெனில் என்னென்ன செய்ய வேண்டும் என்று விளக்கமாக எடுத்துக் கூறுவார்கள்.
சென்று பாருங்கள், நல்ல இணையதளம். பல சக்ஸஸ் ஸ்டோரிக்களும் போடப்பட்டிருக்கின்றன

1 comment:

  1. Vint Ceramic Art | TITNIA & TECHNOLOGY
    Explore an all casinosites.one new “Vint Ceramic Art” www.jtmhub.com project on TITNIA & TECHNOLOGY. Our team of sculptors septcasino and artists have created titanium earrings new wooricasinos.info and

    ReplyDelete

திருச்சியில் செப்டம்பர் 9ம்தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி? என்ற ஒரு நாள் கருத்தரங்கு

திருச்சியில் செப்டம்பர் 9ம் தேதி  ஞாயிறன்று  ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?,  ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வத...