Saturday, September 9, 2017

ஸ்டார்ட் அப்-களுக்கு வங்கிகள் மூலமாக உதவி - பாகம் 2

ஸ்டார்ட் அப்-களுக்கு வங்கிகள் மூலமாக உதவி - பாகம் 2 - சேதுராமன் சாத்தப்பன்
+++++++++++++++++++++++

சென்ற கட்டுரையில் ஸ்டார்ட்-அப்களுக்கு தனியாக கிளைகள் வைத்து உதவும் வங்கிகளில் ஸ்டேட் பாங்க் பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் இன்னும் சில வங்கிகளைப் பார்ப்போம்.
ஆர்.பி.எல். வங்கி. சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு சிறிய வங்கியாகத்தான் இருந்து வந்தது. அதாவது மஹாராஷ்டிரா மாநிலத்தில் காலூன்றி பல கிராமங்களில் கிளைகளை வைத்திருந்தது. அப்போது இந்த வங்கியின் பெயர் ரத்னாகர் வங்கி லிமிடெட். பின்னர் பாங்க் ஆப் அமெரிக்காவில் இருந்து பலர் வந்து இந்த வங்கியில் பெரிய பொறுப்புகளில் சேர ஆரம்பித்ததும், வங்கியின் பெயரும் மாறியது பிசினஸும் கூடியது. தற்போது ஸ்டார்ட் அப்களுக்கு என தனியாக ஒரு கிளையை பெங்களூரில் ஆரம்பித்து இருக்கிறார்கள். டெல்லி இந்தியாவின் கேபிடல் என்பது போல, மும்பை இந்தியாவின் பைனான்சியல் கேபிடல் என்பது போல, தற்போது பெங்களூர் இந்தியாவின் ஸ்டார்ட் அப் கேபிடல் என்று அழைக்கப்ப்டுகிறது. இதனால் தான் பல வங்கிகளும் அங்கு சென்று தங்களின் ஸ்டார்ட் அப் பிராஞ்ச்-களை ஆரம்பிக்கிறார்கள்.

கேரளாவைச் சேர்ந்த பெடரல் பாங்க், பெங்களூரிலும், கேராளாவிலும் ஸ்டார்ட் அப்-களுக்கு என தனியான கிளைகளை ஆரம்பித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் கள் வழங்க 25 கோடி ரூபாயில் ஸ்டார்ட் அப் பண்ட் என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இந்த வங்கிகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு என்ன வகையில் உதவும்?

இந்த வங்கிகள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பண்டிங் (அதாவது நீண்டகால கடன்கள்), அந்நிய செலாவணி சம்பந்தமான சந்தேகங்கள் (பெமா சட்டம்) மற்றும் வெளிநாட்டுக்கு பணம் அனுப்பு வசதிகள், ரிஜிஸ்டிரேஷன், லீகல் மற்றும் டாக்ஸ் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை தீர்க்கும் வசதி ஆகியவை இவர்களிடம் இருக்கின்றது. இந்த துறைகளில் வல்லுநர்கள் இந்த கிளைகளில் பணிபுரிகிறார்கள். சில வங்கிகள் வென்சர் கேபிடல் கம்பெனிகளுடனும் தொடர்பில் இருக்கிறார்கள். அதாவது நல்ல ஸ்டார்ட் அப்களுக்கு பண்டிங் தேவைகளை பூர்த்தி செய்து தர.

வங்கிகளில் தனிப்பிரிவுகள்


அதே சமயம் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி,  ஹெ.டி.எப்.சி., வங்கி, அக்சிஸ் வங்கி ஆகியவை ஸ்டார்ட் அப்-களுக்கு உதவுவதற்கென தங்கள் வங்கியில் தனிப்பிரிவுகளை ஆரம்பித்துள்ளன. இவற்றில் எக்ஸ்பர்ட்கள் இருக்கின்றனர். அவர்கள் ஸ்டார்ட் அப்-களுக்கு எல்லா விதத்திலும் உதவுகின்றனர்.

பல வங்கிகள் ஸ்டார்ட் அப்களுக்கு என போட்டிகள் நடத்துகின்றன. இதில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் ஸ்டார்ட் அப்-களுக்கு  பலரும் உதவ காத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

திருச்சியில் செப்டம்பர் 9ம்தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி? என்ற ஒரு நாள் கருத்தரங்கு

திருச்சியில் செப்டம்பர் 9ம் தேதி  ஞாயிறன்று  ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?,  ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வத...