Saturday, September 9, 2017

கிரவுட் பண்டிங் நிறுவனங்கள்- பாகம் 2

கிரவுட் பண்டிங் நிறுவனங்கள் -பாகம் 2 - சேதுராமன் சாத்தப்பன்
+++++++++++++++++++++++

சென்ற வாரம் கிரவுட் பண்டிங் என்றால் என்ன என்று விரிவாகப் பார்த்தோம். அந்த வகையான கிரவுட் பண்டிங்-யை எப்படிப் பெறுவது? எந்தெந்த நிறுவனங்கள் எப்படி தருகிறார்கள் என்று பார்ப்போம்.
கிரவுட் பண்டிங் என்றால் என்ன என்று கேட்டால் “சோஷியல் பவர் ப்ளஸ் டெக்னாலஜி” என்று கூறலாம்.
இந்தியாவில் பிரபலமாக இருக்கும் சில கிரவுட் பண்டிங் ப்ளாட்பார்ம்ங்கள் என்ன என்று கேட்டால் –


புதுமையான ஐடியாக்களுக்கு

உங்கள் புதுமையான ஐடியாக்கள் அது பிசினஸாக இருக்கட்டும்,உங்கள் திரைப்படத்திற்காகநாவல்கலை கண்காட்சி முதலியவகைளுக்கு ஆன்லைனில் நிதி திரட்டலாம்.

மருத்துவம்

மருத்துவ பில்களுக்காக பணம் திரட்டவும், புற்றுநோயை எதிர்த்து போராடவும், மாற்று சிகிச்சை அல்லது வேறு எந்த மருத்துவ சிகிச்சையும் பெறவும் போதிய வசதி இல்லாதவர்கள் இந்த கிரவுட் பண்டிங் ப்ளாட்பாரங்களை நாடலாம்.


அரசு சாரா நிறுவனங்கள் (NGO) / இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் (Non Profit Organisations)

அரசு சாரா நிறுவனங்களுக்கான (NGO) மூலம் உங்கள் நடவடிக்கைகளை அதிகரிக்கவும் அல்லது நீங்கள் ஆதரிக்கும் இலாப நோக்கமற்ற நிறுவனங்களுக்கு பணம் திரட்டவும் கிரவுட் பண்டிங்கை உபயோகப்படுத்தலாம்.


தனிப்பட்ட காரணங்களுக்காக கிரவுட் பண்டிங்

கல்வி, விளையாட்டு, பயணம் போன்ற செலவுகளுக்காக பணம் திரட்ட இந்த முறையை உபயோகிக்கலாம். உதாரணம் நீங்கள் விளையாட்டில் மிகச் சிறந்தவராக இருக்கலாம், ஆனால் பணம் ஒரு தடையாக இருக்கலாம். அதாவது உங்களின் விளையாட்டு திறனை மேலே எடுத்துச் செல்ல, போட்டிகளில் பங்கு பெற, பயணச் செலவுகள் போன்றவைகளுக்கு.


இந்த கம்பெனி இதுவரை 15 நாடுகளில் சுமார் 330 கோடி ரூபாய கிரவுட் பண்டிங் மூலம் சுமார் 1000 நபர்களுக்கு / நிறுவனங்களின் தேவைகளுக்கு  பெற்று தந்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நபர்களின் தேவைகள் மற்றும் அரசு சாராத நிறுவனங்கள் ஆகியவைகளுக்கு கிரவுட் பண்டிங் பெற்றுத் தருவதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். பண்டிங் அவர்கள் ஏற்பாடு செய்து தருவதால் பெற்றுத் தரும் பணத்தில் சுமார் 4.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அவர்களுக்கு செலுத்த வேண்டியிருக்கும்.


சிறிய அளவில் ஸ்டார்ட் அப் தொடங்குபவர்களுக்கு இந்த இணையதளம் மிகவும் உதவியாக இருக்கிறது. இதுவரை சுமார் 15 கோடி திரட்டியிருக்கிறார்கள். 70க்கும் மேற்பட்ட ப்ராஜக்ட் களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். 4000க்கும் மேற்பட்டவர்கள் இந்த கிரவுட் பண்டிங்கிற்கு உதவியிருக்கிறார்கள்.

இன்னும் பல கிரவுட் பண்டிங் ப்ளாட்பார்ம்ங்களை வரும் வாரங்களில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

திருச்சியில் செப்டம்பர் 9ம்தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி? என்ற ஒரு நாள் கருத்தரங்கு

திருச்சியில் செப்டம்பர் 9ம் தேதி  ஞாயிறன்று  ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?,  ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வத...