Saturday, September 9, 2017

ஸ்டார்ட் அப்-பிற்கு வங்கிகள் மூலம் கடன்

ஸ்டார்ட் அப்-பிற்கு வங்கிகள் மூலம் கடன்
++++++++++++++++++++++++++++++++++++++++

கடந்த இரண்டு வாரங்களாக ஸ்டார் அப்-பிற்கு நிதி உதவிகள் எப்படி கிடைக்கும் என்று பார்த்தோம். இந்த வாரம் வங்கிகள் மூலமாக ஸ்டார் அப்-பிற்கு என்னென்ன உதவிகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

ஸ்டார்ட் அப் என்று கடந்த சில வருடங்களாக பரபரப்பாக பேசப்படும் போதே வங்கிகள் முழித்துக் கொண்டன. பல வங்கிகள் ஸ்டார்ட் அப்-பிற்கென தனியாக கிளைகளை அமைத்தன. அதன் மூலம் கடன் களை வழங்க ஏற்பாடு செய்தன.

உங்களுடையது ஸ்டார்ட் அப் ஆக இருப்பதால் வங்கிகள் கடன் கொடுக்க யோசிப்பார்கள். ஏனெனில் பல ப்ராஜக்ட்கள் சக்ஸஸ் ஆகும், சில தோல்வியையும் அடையும். இதனால் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் கம்பெனிகளுக்கே எல்லோரும் கடன் கொடுக்க விருப்பப்படுவார்கள். இதனால் புதிதாக ஸ்டார்ட் அப் ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கு வங்கிகள் தனியாக கிளைகளை ஆரம்பித்து அதன் மூலம் உங்கள் ப்ராஜக்ட்களை பார்த்து கடன் கள் கொடுத்து வருகிறார்கள். இது தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஸ்டார்ட் அப்களுக்கு தனியாக ஒரு பிரிவை  ஆரம்பித்து அதன் மூலம் கிளைகளை தொடங்கியுள்ளது. முதல் கிளை பெங்களூரில் 2016ம் வருடம் தொடங்கப்பட்டது. இந்த கிளைக்கு “இன் குயூப்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த கிளையில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள், உங்களுக்கு தேவையான ப்ராடக்ட்கள், குறைந்த சர்வீஸ் சார்ஜ், ஆன்லைன், மொபைல் பாங்கிங் வசதிகள், அட்வசைரி சர்வீஸ்கள் போன்றவை கிடைக்கின்றன.  24 மணி நேரம் கவுன்சலிங் சர்வீஸ் இருக்கின்றது. மாதம் ஒரு நியூஸ் லெட்டரும் அனுப்புகிறார்கள் “ஸ்டார்ட் அப் எஸ்பிஐ” என்ற பெயரில். இதில் ஸ்டார்ட் அப் சம்பந்தமான பல உபயோகமான தகவல்கள் இருக்கின்றன.

இது போன்று வேறு என்னென்ன வங்கிகள் ஸ்டார்ட் அப் களுக்கு சேவை புரிகின்றன என்று அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

திருச்சியில் செப்டம்பர் 9ம்தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி? என்ற ஒரு நாள் கருத்தரங்கு

திருச்சியில் செப்டம்பர் 9ம் தேதி  ஞாயிறன்று  ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?,  ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வத...