Saturday, September 9, 2017

கிரவுட் பண்டிங் (CROWD FUNDING) என்றால் என்ன?

கிரவுட் பண்டிங் (CROWD FUNDING) என்றால் என்ன?



கிரவுட் பண்டிங் பற்றி மிகச் சுருக்கமாக சில வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்தோம். பலரிடமிருந்து விரிவாகக் கூறவும் என்ற அழைப்புகள் வந்தது. அதன் தொடர்ச்சி தான் தான் இந்த கட்டுரை.

உங்களிடம் ஒரு நல்ல ப்ராஜக்ட் இருக்கிறது, ஆனால் அந்த ப்ராஜக்டை நடைமுறைப்படுத்த போதிய நிதி வசதி இல்லை. இந்த நிதியை எப்படி உண்டாக்குவது என்பது தான் பெரிய பிரச்சனை.

உங்கள் ஊரில் ஒரு பிரச்சனை இருக்கிறது, அதை சரி செய்ய நிறைய நிதி தேவை. உங்களுக்கு தெரிந்தவர் ஒருவருக்கு உடல் நிலையில் ஒரு பெரிய பிரச்சனை, அவரிடம் மருத்துவ செலவு செய்ய போதிய நிதி வசதி இல்லை. நீங்கள் ஒரு என்.ஜி.ஓ., ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறீர்கள் ஆனால் போதிய நிதி வசதி இல்லை. இது போன்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நிதி ஆதார பிரச்சனைகள். இவைகளுக்கு உதவுவது தான் “கிரவுட் பண்டிங்” என்று பெயர்.

சமீபத்தில் பேப்பர்களில் படித்திருக்கலாம். உலகத்தின் மிகவும் பருமனான பெண்மணி இமான் அகமது எகிப்து நாட்டை சேர்ந்தவர். இவரின் எடை சுமார் 500 கிலோ. படுத்த படுக்கையிலேயே கடந்த பல ஆண்டுகளாக இருப்பவர். அவரை உலகத்தின் மிகச்சிறந்த உடல் மெலியச் செய்யும் மருத்துவர் மும்பையை சேர்ந்தவர் டாக்டர் லக்டாவாலா அவரின் உடல் பருமனை குறைய செய்ய வைப்பதை ஒரு சேலஞ்சாக எடுத்துக் கொண்டு அவரை தனி கார்கோ விமானம் மூலம் மும்பை கொண்டு வந்து அவருக்கென விஷேச தனி கட்டில், தனி ரூம் என எல்லாம் ஏற்பாடு செய்து பல அறுவை சிகிக்சைகள் செய்து சில நூறு கிலோக்கள் அவரின் உடல் எடையில் குறைத்தார். தற்போது அந்த பெண்மணி மேல் சிகிக்கைகாக அபுதாபியில் இருக்கிறார். இந்த அறுவை சிகிச்சை செய்ய மேலும் செலவுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் தேவைப்பட்டது. அதற்கு தேவையான பணம் “கிரவுட் பண்டிங்” மூலம் தான் திரட்டப்பட்டது.



நடிகை ரோகிணி அப்பாவின் மீசை என்ற படத்தை தயாரித்தார்.அப்பாவின் மீசையின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் முடியவில்லை,பணிகள் தடைபட்டுள்ளன. கடைசியாக கிரவுட் பண்டிங்கின் மூலம் பணம் திரட்டுவது என்று முடிவு செய்துள்ளார். இவரின் இலக்கு 40லட்சங்கள். பல சினிமாக்கள் தற்போது கிரவுட் பண்டிங் முறையில் முதலீடு செய்யப்பட்டு எடுக்கப்பட்டு வருகின்றன.

பாரதியார் அந்த காலத்தில் தான் ஒரு புத்தகம் கொண்டு வர பணம் தேவைப்படுகிறது. ஆளுக்கு 100 ரூபாய் கொடுங்கள், வட்டியுடன் திரும்பித் தந்து விடுகிறேன் என்று பலருக்கு கடிதம் எழுதினார் என்று ஆவணங்கள் கூறுகின்றன. இது கிரவுட் பண்டிங்கின் ஆரம்பமாக இருக்கலாம்.



அதாவது உங்கள் தேவைகளை (உடனடியாக எனது கடன்களை அடைக்க ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்று கிரவுட் பண்டிங் ப்ளாட்பார்மில் போட முடியாது) கிரவுட் பண்டிங் ப்ளாட் பாரங்களில் போட்டால் யாருக்கு உங்கள் ப்ராஜக்ட் பிடித்து உதவ வேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்கள் பணம் தருவார்கள்.                     


ஒன்றுக்கும் மேற்பட்டநபர்கள் அந் கம்பெனியில் முதலீடு செய்வது. அது கடனாகவும்இருக்கலாம்மூலதனமாக இருக்கலாம்... நீங்கள் உங்கள் கம்பெனியைப் பற்றிய டீடெய்ல்ட் பிளான் தயாரித்து –கிரவுட் பண்டிங் ப்ளாட் பார்மில்போட வேண்டும்.

இது போல பல ஆயிரம் கம்பெனிகள் கிரவுட் பண்டிங் மூலம் தொடங்கப்பட்டுள்ளன. கிரவுட் பண்டிங்கின் முக்கிய நோக்கமே நல்ல திட்டங்கள் உள்ளவர்கள், நிதி வசதி இல்லாமல் அந்த திட்டத்தை கைவிடக்கடாது என்பது தான்.

இதற்கு என்ன செய்வது? ஒரு பண்ட் ரைசிங் புரோகிராம் தொடங்க வேண்டும். அது மிகவும் எளிது. அது எப்படி என அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

No comments:

Post a Comment

திருச்சியில் செப்டம்பர் 9ம்தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி? என்ற ஒரு நாள் கருத்தரங்கு

திருச்சியில் செப்டம்பர் 9ம் தேதி  ஞாயிறன்று  ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?,  ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வத...